கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நாமக்கல் உழவர் சந்தை தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் தினசரி மற்றும் வாரச்சந்தை திருச்செங்கோடு நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் நாமக்கல் உழவர் சந்தை மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மல்லிகா கூறுகையில், உழவர் சந்தை நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உழவர் சந்தைக்கு முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டும் சந்தைக்குள் அனுமதிக்கப்படுவர். மறு உத்தரவு வரும் வரை இந்த பள்ளி வளாகத்தில் சந்தை நடைபெறும், என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago