வேலூர் அருகே விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் அடுத்த துத்திக்காடு கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (28). ராணுவ வீரரான இவர் ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தவர் நேற்று முன்தினம் இரவு கொல்லைமேடு பாண்டிமடுகு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நாய் ஒன்று குறுக்கே திடீரென கடந்தது. இதனால், நாய் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பிய போது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதினார்.
இதில் படுகாயமடைந்த அவரை அவ் வழியாகச் சென்றவர்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் ஏற் கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வேலூர் கிராமிய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஸ்டீபனுக்கு தேவி பிரியா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago