சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் - மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் : 100 நாள் வேலை கேட்டு முழக்கம்

By செய்திப்பிரிவு

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்காமல் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ் சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடந்த 20-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் மட்டும் மகாத்மா காந்தி தேசியவேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதாகக் கூறி மாற்றுத்திறனாளிகள் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் பணி வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவர்களிடம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரபியுல்லா பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றுத்திறனாளிகளின் தகுதிக்கு ஏற்ப பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனையேற்று, மாற்றுத்திறனாளிகள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்