விழுப்புரத்தில் கரோனா விதிகளை மீறிய கடைக்கு சீல் வைப்பு : பேருந்துகளில் ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட முக்கிய கடைவீதிகளில் கரோனாதொற்று வழிக்காட்டு நெறிமுறை கள் கடைபிடிக்கப்படுகிறதா என ஆட்சியர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாகர்ஷா வீதி,எம்ஜிரோடு, காமராஜர் வீதி மற்றும் பழைய பேருந்துநிலையம் உள்ளிட்ட கடைவீதி பகுதிகளில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்கிறார்களா என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது சமூகஇடைவெளியினை கடை பிடிக்காமல், முகக்கவசம் அணியாத ஊழியர்களுடன் இயங்கிய கடையினை சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மேலும் கடைவீதியில் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையினை ஆக்கிரமித்து இயங்கி வரும் கடைகளை உடனடியாக நகராட்சி மைதானத்திற்கு எடுத்துச்சென்று விற்பனை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தார்.

இதை தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் மேற்கொள்வதை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது சமூக இடைவெளியை கடை பிடிக்காமல், இருக்கைகளுக்கு அதிகப்படியான பயணிகளை ஏற்றி வந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பேருந்துகளை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம், விழுப்புரம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்