திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று முன்தினம் லேசான மழைபெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24மணி நேரத்தில் சங்கரன்கோவிலில் 6 மி.மீ.,தென்காசியில் 3.60, செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது. கடையநல்லூர், நயினாகரம் பகுதிகளிலும் லேசான மழைபெய்தது. நேற்று பகலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம்நேற்று 104.20 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 25.12 கனஅடி நீர் வந்தது. 254.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 117.19 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 90.60 அடியாக இருந்தது. அணைக்கு 22 கனஅடி நீர் வந்தது. 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
பிற அணைகளின் நீர் மட்டம் விவரம்:வடக்கு பச்சையாறு அணை 43.12 அடி, நம்பியாறு அணை 12.59 அடி, கொடுமுடியாறு அணை 5 அடி, கடனாநதி அணை 67.70 அடி, ராமநதி அணை 59.88அடி, கருப்பாநதி அணை 51.35 அடி, குண்டாறு அணை 28.87 அடி, அடவிநயினார் அணை 15 அடி.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago