பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சலூன் கடைகளை மூடும் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என கோரி முடி திருத்தும் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலசங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாவட்டத் தலைவர் கணபதி தலைமையில் அளித்த மனுவில், ‘‘கரோனா ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள சலூன் கடைகளை மூடும் உத்தரவு அதிர்ச்சியை அளிக்கிறது. கடந்த ஆண்டு சலூன் கடைகளை நாங்கள் அடைத்து வாழ்வாதாரத்தை இழந்து பசி பட்டினியோடு கடன் தொல்லையில் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
அரசு தரப்பில் நிவாரண உதவி தொகைக்கூட கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் மீண்டும் எங்கள் முடி திருத்தும் தொழிலை முடக்கும் அறிவிப்பால் எங்கள் வாழ்வாதாரம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, நேரக் கட்டுப்பாடுகள் விதிமுறைகளை பின்பற்றி சலூன் கடைகளை திறந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
ஆற்காடு
ஆற்காடு நகராட்சி அலுவல கத்தில் தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் ஆற்காடு நகரத் தலைவர் பிரபு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சலூன் கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு கரோனா தொற்றால் 6 மாதங்கள் முடி திருத்தும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தனர்.இந்த பொருளாதார பின்னடைவில் இருந்து மீண்டு வர முடியாத நிலையில் தற்போது மீண்டும் சலூன் கடைகள் அடைப்பு என்ற அறிவிப்பு பேரதிர்ச்சியாக இருக்கிறது. இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்து எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago