கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முழு ஊரடங்கு - சாலைகள், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின :

By செய்திப்பிரிவு

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடின.

கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுநெறிமுறைகளை வெளியிட்டுள் ளது. இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமையில் முழுஊரடங்கையும் அமல்படுத்தி யுள்ளது.

நேற்று முழு ஊரடங்கையொட்டி கடலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள், மார்க் கெட்டுகள், தியேட்டர்கள் அடைக் கப்பட்டிருந்தன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை.போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட் டிருந்ததால் சாலைகள், பேருந்துநிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பால்கடை, மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. முக்கிய இடங்களில் தடுப்புக் கட்டைகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் விழுப்புரம், கள் ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று முழு ஊடரங்கால் மக்கள்நடமாட்டம் இல்லாமல் சாலைகள்வெறிச்சோடின. அத்தியாவசிய தேவைக்கு தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. விழுப் புரத்தில் புதுவை சாலை, விழுப்புரம் புறவழிச்சாலை வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்ட எஸ்பிக்கள் ஜியாஹூல்ஹக், ராதாகிருஷ் ணன் உத்தரவின்படி அனைத்து சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகளிலும் போலீஸார் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்ததால் சாலைகள், பேருந்துநிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்