கண்ணனூர் ஏரியில் இறந்த மீன்கள் அகற்றம் :

By செய்திப்பிரிவு

கண்ணனூர் ஏரியில் இறந்து மிதந்த மீன்களை பேரூராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.

தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு கண்ணனூர் ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தன. மீன்கள் அதிகள வில் இறந்து கரை ஒதுங்கியது. மீன்களின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசியது.

மேலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் சூழல் உருவானது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள், ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களை அகற்றியும், ஏரி தண்ணீரை தூய்மைப்படுத்த மருந்து தெளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து நாளிதழ்களில் நேற்று செய்தி வெளியானது. இதை யடுத்து, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. துப்புரவுத் தொழிலாளர்கள் மூலம், கரை ஒதுங்கிய மீன்கள் அகற்றப்பட்டன. குவியல் குவிய லாக இறந்து கிடந்த மீன்களை டிராக்டரில் கொண்டு சென்றனர்.

இதையடுத்து, ஏரி மற்றும் ஏரிக்கரையில் பிளிச்சிங் பவுடரை தூவினர். ஏரியின் நடு பகுதியிலும் உயிரிழந்த மீன்கள் மிதப்பதால், அவைகள் கரை ஒதுங்கிய பிறகே அகற்றப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கண்ணனூர் ஏரியில் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் உயிரிழந்த மீன்கள் மற்றும் ஏரி தண்ணீரை ஆய்வுக் காக சேகரித்து கொண்டு சென்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்