திண்டிவனம் அருகே கடத்தப்பட்ட வழக்கில் திருப்பம் - ரூ.12 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது :

By செய்திப்பிரிவு

இரிடியம் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வடபழனியில் வசித்து வருபவர் சிவன் (47). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவர் கடந்த 18-ம் தேதி மாலை விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்த மழவந்தாங்கல் பகுதியில் இடம் பார்க்க வந்தார். அப்போது அவரை காரில் வந்த ஒரு கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த கடத்தலில் தொடர்புடைய மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பசும்பொன் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான நாகராஜ் (53),சென்னை திருநின்றவூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த செந்தில்நாதன் (42), திருநின்றவூர் நாச்சியார் சத்திரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (32), காங்கேயத்தை அடுத்தமுத்தூர் புதுப்பாளையத்தை சேர்ந்த செந்தில் (47), அவரதுமனைவி சத்யா (34) ஆகிய 5 பேரைதனிப்படை போலீஸார் கைது செய்தனர். கடத்தப் பட்ட சிவனை போலீஸார் மீட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிவனை பணம் மோசடி செய்த புகார் தொடர்பாக போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து விவரம் வருமாறு:

சென்னை திருநின்றவூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த செந்தில்நாதனுக்கு (42) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவன் அறிமுகமாகியுள்ளார். அப்போது சிவன், தனக்கு தெரிந்த சிலரிடம் இருந்து இரிடியம் வாங்கி விற்பனை செய்து வருவதாகவும், இதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய செந்தில்நாதன், தனக்கு இரிடியம் வாங்கித்தரும்படி ரூ.12 லட்சத்தை சிவனிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்ற சிவன், இதுவரை செந்தில்நாதனுக்கு இரிடியம் கொடுக்கவில்லை. பணத் தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.

பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கொன்று விடுவதாக சிவன் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து செந்தில்நாதன், கண்டாச்சிபுரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்