தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் மற்றும் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், ‘தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தபால் வாக்குக்கு விண்ணப்பித்த அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்குகள் வரவில்லை என்று புகார்கூறுகின்றனர். தேர்தல் நடத்தும்அலுவலரிடம் கேட்டால் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது வட்டாட்சியரை பார்க்கச் சொல்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் உரிய பதில் கிடைப்பதில்லை.
சங்கரன்கோவில் தொகுதியில் மொத்த தபால் வாக்குகள் 3,927. கடந்த 20-ம் தேதி வரை பெறப்பட்ட தபால் வாக்குகள் 1,921 மட்டுமே. அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்குகள்கிடைக்கவில்லை என்று புகார்வருகிறது. அந்த அடிப்படையில் அதிகாரிகளை சென்று பார்க்கும்போது, தபால் வாக்குமுகவரி சரியாக இருக்கிறது. ஆனால், அஞ்சலக ஊழியர்கள்அதை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். எனவே, தபால் வாக்குகள் அனுப்பப்படாமல் இருப்பின் உடனடியாக அனுப்ப அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும்அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தபால் வாக்குகளைமுறையாக சேர்க்க சம்பந்தப்பட்ட தபால் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago