குறிஞ்சிப்பாடி பகுதியில் காலை 6 மணி நேரமும், இரவு 8 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயி கள் சார்பாக அயன்குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராம லிங்கம் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிக்கு ஒரு மனு அனுப் பியுள்ளார். அதில் கூறியிருப்பது:
குறிஞ்சிப்பாடி பகுதியில் தற்சமயம் சுமார் 500 ஏக்கரில் நவரைப்பட்ட நெல் நடவு செய்யப்பட்டுள் ளது. மணிலா எடுத்த சுமார் 800 ஹெக்டர் அளவிற்கு எள் பயிர் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறுவைக்கு நாற்றங்கால் செப்பனிடும் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 400 ஏக்கர் அளவில் பசுந்தாள் உரமான தக்கைபூண்டு, சணப்பு போன்றவை விதைக்கப்பட்டுள்ளது. இவை களுக்கு தற்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நெய்வேலி தண்ணீர் வரத்தும் குறைந்துவிட்டது. பெரும்பாலும் போர்வெல்லை நம்பியே விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் அரசு, ஏப்ரல் 1 முதல் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் இதுவரை 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங் கப்படவில்லை.
கடந்த ஒரு வாரமாக குறிஞ்சிப்பாடிபகுதியில் பகலில் மும்முனை மின்சாரம் ஒரு மணிநேரம் கூட கிடைப்பதில்லை. இருமுனை மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது. சில விவசா யிகள் இருமுனை மின்சாரத்தில் கெப்பாசிட்டரை பயன்படுத்தி மோட்டாரை இயக்குகின்றனர். ஒரே சமயத்தில் இருமுனை மின்சாரம் அதிகளவு பயன்படுத்தும் பொழுது மின்மாற்றிகள் பழுதடைந்து முற்றிலுமாக மின்நிறுத்தம் ஏற்படுகிறது. ஏற்கெனவே உள்ளது போல பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கொடுத்தாலே போதுமானது ஆகும். எனவே மாவட்ட ஆட்சியர் பழைய முறைப்படி பகலில் 6 மணி நேரமும், இரவில் 8 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் இதுவரை 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago