வாக்கு எண்ணிக்கை தொடர்பாக - வேட்பாளர்கள், முகவர்களுடன் ஆட்சியர் ஆலோசனை :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மேற்கொள்ளவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியர் பேசி யதாவது:

தென்காசி மாவட்டத்தில் அனைத்து சட்டப் பேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க போதுமான பரப்பளவை கொண்டுள்ளதால் ஏற்கெனவே நடைபெற்ற தேர்தல்களில் பின்பற்றியதுபோல 14 மேஜைகளை கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மாவட்டத்தின் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கைக்கு தங்களால் நியமனம் செய்யப் படும் முகவர்கள் பட்டியலை இன்று மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும். கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக 10 சதவீதம் கூடுதல் முகவர்கள் பட்டியலை தனியே ஒப்படைக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து முகவர்களுக்கும் வரும் 28-ம் தேதி நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். அனைத்து முகவர்களும் தவறாது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சவுந்தர்யா, தேர்தல் வட்டாட்சியர் சண்முகம், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்