வேலூர் மாங்காய் மண்டி அருகேஉள்ள மைதானத்தில் விடுபட்ட 45 காய்கறி மொத்த வியா பாரிகளுக்கு தற்காலிக கடைகள் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி கடைகள், பூக்கடைகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நேதாஜி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மொத்த வியாபாரம் மாங்காய் மண்டி அருகேயுள்ள மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 130 காய்கறி வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் அமைக்க வேண்டும்.
ஆனால், வேலூர் மாநகராட்சி தரப்பில் 85 கடைகளுக்கு மட்டுமே தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. மீதமுள்ள 45 வியா பாரிகளுக்கு தற்காலிக கடைகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகள் சிலர் தனி நபர் ஒருவருக்காக வேன்கள் மூலம் காய்கறி வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு, வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மீதமுள்ள வியாபாரிகளுக்கு கடைகளை வழங்காவிட்டால் மீண்டும் நேதாஜி மார்க்கெட்டுக்கே செல்வோம் என எச்சரித்தனர்.
இதையடுத்து, வேலூர் மாநகராட்சியில் வியாபாரிகளு டனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், விடுபட்ட வியாபாரிகள் 45 பேருக்கு தற்காலிககடைகள் அமைத்துக் கொடுக்கப் படும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டதால் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago