போளூர் அருகே - காலி இடத்தில் பதுக்கிய 106 யூனிட் மணல் பறிமுதல் : ரியல் எஸ்டேட் அதிபர் உட்பட 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

போளூர் அருகே காலி இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 106 யூனிட் மணல் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கரிக்காத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ரியல் எஸ்டேட் அதிபர் கோவிந்தசாமி. இவருக்கு சொந்தமாக முருகப்பாடி கிராமத்தில் காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் மணல் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை மற்றும் காவல் துறைக்கு நேற்று முன் தினம் மாலை தகவல் கிடைத்தது.

அதன்படி வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப் போது, சுற்றுச்சுவர் எழுப்பப்பட் டிருந்த காலி இடத்தில் குவியல் குவியலாகமணல் பதுக்கி வைக்கப்பட்டி ருந்தது தெரியவந்தது. இதை யடுத்து, மணல் அளவு குறித்து ஆய்வு செய்ததில், 106 யூனிட் மணல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த இடத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர்.

இது குறித்து போளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபர் கோவிந்தசாமி, பாக்மார்பேட்டை ராமலிங்கம், கரிக்காத்தூர் பாலாஜி, அரவிந்தன், ராஜேந்திரன், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரமணா ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், ஒரு ‘பொக்லைன்’ இயந்திரம் உட்பட 5 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து காவல் துறையி னர் கூறும்போது, "செய்யாற்றில் இருந்து மணலை கடத்தி வந்து பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்