கடலூர் வாக்கு எண்ணும் மையத் தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடை பெற்ற வாக்குப்பதிவு நான்கு மையங்களில் எண்ணப்படுகிறது. கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையமான கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், நெய்வேலி மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையமான பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத் திலும் திட்டக்குடி மற்றும் விருத் தாசலம் சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையமான விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியிலும், புவனகிரி,சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மைய மான சி.முட்லூர் அரசு கலை கல்லூரியிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளன. நான்கு மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்புடன்
கண்காணிப்பு கேமராக்கள்பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர்தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாது காத்து வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகங்கள் கண்காணிக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago