தமிழ்நாடு கிராம நிர்வாக அலு வலர்கள் முன்னேற்ற சங்கத்தின் விக்கிரவாண்டி வட்டம் சார்பில் மாவட்ட பொருளாளர் கேசவன் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நாளன்று பணி செய்த விஏஓக்களுக்கு வழங்க வேண்டிய படித்தொகை ரூ800 ம், கிராம உதவியாளருக்கு வழங்க வேண்டிய படித் தொகை ரூ600ம் இது நாள் வரை வழங்காமல் நிலுவையில் உள்ளது. இந்நிதியை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து, வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்ட நிலையிலும் எங்க ளுக்கு படித்தொகை வழங்காமல் அலைகழிக்கின்றனர்.
கரோனா தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணி செய்திட்ட எங்களுக்கு பணி படித்தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago