ராம நவமியை முன்னிட்டு - ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு பூஜை :

By செய்திப்பிரிவு

தேவிபட்டினம் அருகே சக்கரவாளநல்லூர் பெருந்தேவி நாயிகா சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சக்கரவாளநல்லூர் கிராமத்தில் பழமையான ‘பெருந்தேவி நாயிகா சமேத ஆதிகேசவப் பெருமாள்’ கோயில் உள்ளது. இக்கோயிலில் ராம நவமியை முன்னிட்டு நேற்று பெருந்தேவி மற்றும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் ஆஞ்சநேயர், ராமானுஜர், சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பட்டர் சவுமிய நாராயண ஐயங்கார் சிறப்பு பூஜையை நடத்தினார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள், தேவிபட்டினம் கடலடைத்த ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

சக்கரவாளநல்லூர் கிராமம்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாய்வழிப் பாட்டியின் பூர்வீகக் கிராமம். அதேபோல் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அரசு வழக்கறிஞராக இருந்தவரும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கே.பராசரனின் பூர்வீக கிராமமும் ஆகும். அதேபோல் இக்கிராமத்தைச் சேர்ந்த பலர் மருத்துவ நிபுணர் களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்