வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 297 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை தொடங்கியுள்ளதால் ஏப்ரல் 20-ம் தேதி முதல் இரவு நேர பொது ஊரடங்கு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத் தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 23,400 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில், 21, 791 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 297 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகர பகுதியில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் 30 பேர் கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர். குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட செதுக்கரை, பள்ளூர், பிச்சானூர், அணைக் கட்டு, பள்ளிகொண்டா, செதுவாலை, அப்துல்லாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதி களிலும் நேற்று புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மட்டும் 150-க்கும் மேற்பட் டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரை தொடர்ந்து குடியாத்தம் வட்டத்திலும் கரோனா வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் உச்ச கட்டமான பாதிப் பாக நேற்று ஒரே நாளில் 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் உள்ளவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருவதால் கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை யினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், கரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கரோனா தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago