வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த - காய்கறி மார்க்கெட் மாங்காய் மண்டி அருகே இடமாற்றம் :

By செய்திப்பிரிவு

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி வியாபாரம் மாங்காய் மண்டி அருகேயுள்ள மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

வேலூரில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வேலூரில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை, உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் ஆகியவை வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி வியாபாரம் வேலூர் - பெங்களூரு சாலையில் உள்ள மாங்காய் மண்டி அருகேயுள்ள மைதானத்துக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி, நேதாஜி மார்க்கெட்டில் இயங்கி வந்த மொத்த காய்கறி கடைகள் மாங்காய் மண்டி அருகே இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கு நேற்று 86 கடைகள் அமைக் கப்பட்டுள்ளன. அதேபோல, நேதாஜி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த சில்லறை காய்கறி கடைகள் பழைய மீன் மார்க்கெட் வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

மாங்காய் மண்டியில் நேற்று அதிகாலை காய்கறி மொத்த வியாபாரம் தொடங்கியது. ஒரே இடத்தில் காய்கறிகளை வாங்க அதிக அளவில் மக்கள் கூடியதால் தனிமனித இடைவெளியை பின்பற்று வது பெரும் சவாலாக அமைந்தது.

இந்நிலையில், மாங்காய் மண்டி அருகே அமைக்கப்பட்ட காய்கறி மார்க்கெட்டில் வியா பாரிகள், பொதுமக்கள் மற்றும் கூலித்தொழிலாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை எனவும், விரைவில் அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்