சென்னை, ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் சிவன் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தன்னுடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், சம்பத், ராஜேந்திரன் ஆகியோருடன் விழுப்புரம் புறவழிச் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட் டுள்ளார்.
அப்போது அங்கு வந்த மதுரையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ், சிவனை தனியாக அழைத்துச் சென்று பேசி னார்.
பின்னர் நிலம் பார்க்க செல்வதாக நாகராஜ் தனது காரில் சிவன் மற்றும் ராஜேந்திரனை ஏற்றிக்கொண்டு கண்டாச்சிபுரம் நோக்கி புறப்பட்டார். அந்த காரை, பின் தொடர்ந்து வெங்கடேசன் உள்ளிட்டோர் சென்றனர்.
மாலை 5 மணிக்கு, கண்டாச் சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் காட்டுப் பகுதியில் சென்றபோது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர் நாகராஜ் காரை மடக்கி, துப்பாக்கி முனையில் சிவன் மற்றும் ராஜேந்திரனையும் தங்கள் காரில் கடத்திச் சென்றனர். அந்த காரை பின் தொடர்ந்து நாகராஜ் தனது காரில் சென்றார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு இதுபற்றி தகவல் அளித்துள்ளனர்.
முரணான தகவல்
அதைத் தொடர்ந்து எஸ்.பி., ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.தொடர்ந்து, சிவன் மற்றும் ராஜேந்திரனை போனில் போலீஸார் தொடர்பு கொண்டனர். அப்போது, சிவன் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தொழில் தொடர்பாக பேசி வருவதாகவும், தாங்களே வந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். ஆனால், ராஜேந்தி ரனோ, சேலம் அருகில் சென்று விட்டதாக கூறினார்.
ஆனால், அவர்களின் மொபைல் போன் டவர்களின் சிக்னல் கண்டாச்சிபுரம் காட்டுப் பகுதியை காட்டியது. முன்னுக்குப் பின் தகவல்கள் வந்த நிலையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கரூர் அருகே அரவக்குறிச்சியில் இவ்வழக்கு தொடர்பாக 4 பேரை விழுப்புரம் போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago