விவசாயிகளிடம் விளைபொருட் களை வாங்கி ரூ.40 லட்சம் மோசடிசெய்ததாக தனியார் நிறுவனம் மீது 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த10-க்கும் மேற்பட்ட விவசாயிகள்,கோவை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செல்வநாகரத் தினத்தை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், ‘‘விவசாயிகளான நாங்கள், விளை பொருட்களை அன்னூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு அனுப்பினோம். மொத்தபொருட்கள் மதிப்பில் 20 சதவீதத்துக்கான தொகையை மட்டும் அந்நிறுவனத்தினர் அளித்துள்ளனர். மீதமுள்ள தொகைக்கு காசோலை அளித்தனர். அதை வங்கியில் செலுத்தியபோது, தொகை இல்லை என திரும்ப வந்து விட்டது.இதுதொடர்பாக அந்நிறுவனத்திடம் தெரிவித்தும் உரிய பதில் இல்லை. இந்நிறுவனத்தினர் 10-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.40 லட்சம்மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக அன்னூர் போலீஸில் கடந்தபிப்ரவரி மாதம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதுதொடர்பாக போலீஸார் விசாரித்துஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago