குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது தட்டுப்பாடு நிலவுவதால் அங்கு தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமை மருத்துவர் பாரதி கூறியதாவது:
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி 45 வயது முதல் 59 வயது வரையிலான 696 நபர்களுக்கு முதல் ஊசி போடப்பட்டுள்ளது. 2-வது ஊசி 9 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட1,099 நபர்களுக்கு முதல் ஊசியும், இரண்டாவது ஊசி 35 நபர்களுக்கும் இதுவரை போடப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி மருந்து இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருந்து வந்ததும் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்பட்டு வந்த கரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். மருந்து இருப்பு இல்லை. மருந்து வந்ததும் மீண்டும் தடுப்பூசி போடப்படும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago