லால்புரம் ஊராட்சியில் கஞ்சா, மது வகைகள் விற்பனை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார்

By செய்திப்பிரிவு

சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி சார் - ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர்கள் ராமச்சந் திரன், சதானந்தன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் நேற்று சிதம்பரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். மனுவில் கூறியிருப்பது:

சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட லால்புரம் ஊராட்சி பகுதியில் அரசின் மதுபானத்தை சில நபர்கள் வீட்டில் வைத்து விற்பனை செய்துவருகின்றனர். இதனால் அங்கு மது வாங்கி சாலையில் அமர்ந்துகுடிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. பொதுமக்களுக்கும் சாலையில் உட்கார்ந்து குடிப்பவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் லால்புரம் ஊராட்சி பகுதியில் உள்ள தொடர்ந்தாலம்மன் மேடு பகுதியில் கஞ்சா, போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. அப்பகுதி இளைஞர்கள் கெட்டுப் போகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மதுபானத்தை சில நபர்கள் வீட்டில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்