சிவகாசி அருகே பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலம் திடீரென அரசு புறம்போக்கு நிலமாக மாற்றப்பட்டதாக ஆட்சியரிடம் விவசாயி புகார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈசாக் (65). அப்பகுதியில் தனக்குச் சொந்தமான 56 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். விவ சாயப் பணிக்காக 1999-ல் மங்களம் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியுள் ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாததால் விவசாயம் செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நிலத்தை தனது மகள் பெயருக்கு எழுதிக் கொடுப்பதற்காக பத்திரப்பதிவு அலு வலகத்துக்குச் சென்ற போது, தனது விவசாய நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்று மாற்றப்பட்டுள்ளதைப் பார்த்து ஈசாக் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, மாவட்டப் பதிவாளர், வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதையடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலம், திடீரென எவ்வாறு அரசு புறம்போக்கு நிலம் என மாற்றப்பட்ட தெனத் தெரியவில்லை. இந்த நிலத்துக்கான பட்டா, சிட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன.
எனது நிலத்தை அரசு புறம்போக்கு நிலமாக மாற்றியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது நிலத்தை மீண்டும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago