கரோனா பரவல் காரணமாக விழாக் களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தப்பாட்டத்துடன் வந்து சிவகங்கை மாவட்ட ஆட்சி யர் பி.மதுசூதன்ரெட்டியிடம் கலை ஞர்கள் மனு கொடுத்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடைவித்துள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை யடுத்து விழாக்களுக்கு விதித்த தடையை நீக்க வலியுறுத்தி சிவ கங்கை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சார்பில் தாரை தப்பட்டையுடன் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தனர்.
இது குறித்து கலைஞர்கள் கூறியதாவது:
தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை உலகுக்கு வெளிப் படுத்தும் கலைஞர்களின் வாழ்வா தாரம் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண் டில் திருவிழாக்கள் நடக்காததால் உணவுக்கே சிரமப்பட்டோம். பின்னர் படிப்படியான தளர்வு களால் கலைநிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கின.
இந்நிலையில் மீண்டும் கோயில் விழாக்கள், சுப நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்துள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செய்வதறியாது இருக்கிறோம். எனவே, விழாக் களுக்கான தடையை நீக்கி கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும், என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago