கரோனா தொற்று விதிமுறைகளை முறையாக பின்பற்றி கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கக் கோரி சேலம் ஆட்சியரிடம் நாட்டுப்புற கலைஞர்கள் மனு அளித்தனர்.
நாட்டுப்புற கிராம கலைஞர்கள் உள்ளிட்ட திருமணம் சார்ந்த தொழில் முனைவோர் பலர் நேற்று ராஜாஜி சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சேலம் ஆட்சியர் அலுவலகம் வந்து, ஆட்சியர் ராமனிடம் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக நாட்டுப்புற கலைஞர்கள் கூறியதாவது:
கரோனா தொற்றால் கடந்தாண்டு முழுவதும் தொழில் பாதிக்கப்பட்டு வருவாய் இன்றி குடும்பம் வறுமை நிலையில் இருந்து வருகிறது. மீண்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நாளை (இன்று) முதல் அமலுக்கு வருவதால், தொழில் பாதிப்படைந்து வருவாய் இழக்கும் நிலையுள்ளது. எனவே, கரோனா விதிமுறைகளை பின்பற்றி கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக ஊர்வலமாக வந்த நடன கலைஞர்கள் நடனமாடியும், மெல்லிசை கலைஞர்கள் இசை வாத்தியங்களை வாசித்தும், சமையல் கலைஞர்கள் பாத்திரங்களுடன் பங்கேற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
நாமக்கல்
கோயில் திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கக்கோரி, நாட்டுப்புற கிராமியக் கலை நையாண்டி மேளம், கரகாட்ட கலைஞர்கள் வளர்ச்சிக்கழகத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மேள, தாளம் முழங்க வந்து மனு அளித்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago