திருப்பத்தூரில் வியாபாரிகளை கட்டாயப்படுத்தும் - தனியார் நிறுவனத்துக்கு தடை விதிக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் வியாபாரிகளை கட்டாயப்படுத்தி பொருட்களை விற்பனை செய்ய முயற்சி செய்யும்தனியார் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் செந்தில்முருகன், செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாவட்ட ஆட் சியர் சிவன் அருளிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்ப தாவது, ‘‘திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அத்தியாசிய உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் பிரபல நிறுவனங்களின் பொருட்களையும் விற்பனை செய்யும் விநியோகஸ்த உரிமை பெற் றிருக்கிறோம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 150 விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்நிலையில், ‘எலாஸ்டிக்ரன்’ என்ற தனியார் நிறுவனம் தற்போது புதிதாக திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்களை அணுகி விற்பனைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தங் களிடமே வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், உரிமம் பெற்ற விநியோகஸ்தர்களின் உரிமை பறிக்கப்படுவதுடன், பொருட் களை விநியோகம் செய்வதில் அந்த தனியார் நிறுவனத்தின் முடிவே இறுதியாகி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களும், கடை உரிமையாளர்களும் பாதிக்கப் படும் நிலை ஏற்படும்.

எனவே, அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவர்கள் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்படு வதை தடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்