பேருந்துகளில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் முறையாக கடை பிடிக்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி முகக்கவசம்அணிதல், சமூக இடை வெளியை கடைபிடித்தல் போன்றவை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த விதிமுறைகளை மீறு வோருக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இவற்றை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையத்தில் கரோனா தொற்று வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் மற்றும் பேருந்துகளில் நடத்துநர்களால் கடைபிடிக்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பேருந்துகளில் முகக்கவசம் அணிந்து வரும் பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பேருந்துகளில் இருக்கைகளுக்கு தகுந்தாற்போல் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத் தினார்.

நாமக்கல் நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும், எனவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் பொன்னம் பலம் மற்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்