கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் பணியாற்றிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களுக்கு பேரிடர் கால சிறப்பு ஊதியமாக 2 மாத ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர். அ.பழனி வேல்ராஜா தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் அருண்குமார் வரவேற்றார்.

மாநில துணைத் தலைவர் அபிமன்னன், மாவட்ட துணைத் தலைவர் தாமஸ் விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ப.குமரிஅனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டம் ஆகிய வற்றை செயல்படுத்த வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் பணியாற்றிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களுக்கு 2 மாத ஊதியத்தை பேரிடர் கால சிறப்பு ஊதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்