முகக்கவசம் அணிந்து பயணம் செய்கிறார்களா? என்பதை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைவாக உள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் கடந்த 16-ம் தேதி கூறிய நிலையில், தற்போது தினசரி 125 பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். வாகன ஓட்டிகள், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், கடைகளில் உள்ள தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கை யாளர்கள் ஆகியோர் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தலைமையிலான குழுவினர், கிரிவலப் பாதையில் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக முகக்கவசம் அணி யாமல் வந்தவர்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலித்தனர்.
மேலும், வேலூர் சாலையில் சென்ற பேருந்துகளில் திடீர் சோதனையிட்டு முகக்கவசம் அணிந்து பயணிகள் மற்றும் நடத்துநர், ஓட்டுநர் ஆகியோர் பயணம் செய்கிறார்களா? என்பதை யும் மற்றும் இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிகள் பயணம் செய்கிறார்களா? என்பதை உறுதி செய்தனர். அப்போது அவர்கள், முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago