காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் வழியாக வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிமாநிலங் களுக்கு ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களையொட்டி யுள்ள வேலூர் மாவட்டத்தில் இருந்து ரயில்கள், லாரிகள், மினி லாரிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அவரது உத்தரவின்பேரில் அரிசி கடத்தலை தடுக்கும்பணியில் வருவாய் மற்றும் காவல் துறை யினர் கடந்த சில நாட்களாக கண்காணிப்புப்பணிகளை தீவிரப் படுத்தியுள்ளனர். இந்நிலையில், வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் பானு தலைமையில், பறக்கும் படை வட்டாட்சியர் கோட்டி, காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வேலூர் அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களை யும் வருவாய்த் துறையினர் கண் காணித்தனர். நள்ளிரவு 12.10 மணியளவில் அவ்வழியாக வந்த மினி லாரியை வருவாய் துறையினர் மடக்கி சோதனையிட்டபோது அதில் சிறு, சிறு மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச்செல்வது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அந்த அரிசி மூட்டைகளை மினிலாரியுடன் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் அவற்றை அரிசி கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (31), வெற்றி வேலன் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப் பட்ட 5 டன் ரேஷன் அரிசி நுகர் பொருள் வாணிபக்கிடங்கில் ஒப் படைக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago