திருவெண்ணெய்நல்லூர் நர்ஸ் கொலையில் - பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் : தவாக தலைவர் வேல்முருகன், சபா ராஜேந்திரன் எம்எல்ஏ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருவெண்ணெய்நல்லூர் நர்ஸ்கொலையில் பாதிக்கப்பட்டவர் களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று சபா ராஜேந்திரன் எம்எல்ஏ, தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோர் வலியுறுத்தி யுள்ளனர். கடலூரில் இருவரும் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் கடந்த 2-ம் தேதி கொலை செய்யப் பட்டார். இக்கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸாருக்கு பாராட்டு மற்றும் நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம்.

உயிரிழந்த சரஸ்வதி கரோனாகாலத்தில் செவிலியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்க தாகும். அதே சமயத்தில் அவரது தாயார் ஜெயகாந்தியும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இது போன்ற சமூக நோக்கத்துடன் இந்த பணிகளை மேற்கொண்ட சரஸ்வதியை கொலை செய்தவர்களை கண்டிக் கிறோம்.

இந்த வழக்கை, விரைவு நீதிமன்றத்தில் உடனடியாக உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கொலை நடைபெற்ற பிறகு இரு சமுதாயத்தை சேர்ந்த நபர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து மாற்று கருத்தை தெரிவித்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நாங்கள் நடந்த சம்பவத்தை விசாரித்து அதனை கூறி வருகிறோம்.

உயிரிழந்த சரஸ்வதி குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண மும், அவர்களது குடும்பத்தில் ஒரு வருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலையும் வழங்க வேண்டும்.அனைத்து கட்சி மற்றும் அனைத்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் இதுகுறித்து அரசு நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றனர். தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபாராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் தலா ரூ. ஒரு லட்சம் என ரூ. 2 லட்சத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கினர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட தலைவர் சுரேந்தர், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த வீரமணி, அவரது மனைவி ஜெயகாந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்