நடிகர் விவேக் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம். படித்தார். கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் வெளிப்பட்ட அவரது நடிப்பு திறமையே, பிற்காலத்தில் அவர் திரைப்படத் துறையில் தடம் பதிக்க காரணமாக அமைந்தது.
சினிமாவையும், மதுரையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மதுரையில் பிறந்து வளர்ந்தவர்கள், இங்குள்ள கல் லூரிகளில் படித்தவர்கள் பலர் திரைப்படத் துறையில் சாதனை புரிந்துள்ளனர். அவர்களில் நடிகர் விவேக் முக்கியமானவர்.
இவர் மதுரை அமெரிக்கன் கல் லூரியில் 1978-1981-ம் ஆண்டுகளில் பி.காம். படித்தார். பின்னர் எம்.காம். படித்துவிட்டு சிறிது காலம் மதுரையில் தொலைபேசி ஆப ரேட்டராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து அரசு வேலை கிடைத்து சென்னையில் பணியாற்றினார். தொடர்ந்து சினிமாவில் முயற்சித்து நட்சத்திரமாக ஜொலித்தார்.
சினிமாவில் உச்சம் தொட்டப் பிறகும் மதுரையையும், தான் படித்த அமெரிக்கன் கல்லூரியையும் அவர் மறக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்து சென்றார்.
இந்நிலையில் நேற்று நடிகர் விவேக் காலமானதை அடுத்து, அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு அவருடைய கல்லூரி நண்பர்களும், தற்போதைய மாணவர்களும், பேராசிரியர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறுகையில், எங்கள் கல்லூரியில் படித்த மாணவரான நடிகர் விவேக் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவர் மறைந்தாலும் எங்கள் கல்லூரியில் அவர் வைத்த மரத்தின் நிழலாகவும், காற்றாகவும் என்றென்றும் எங்கள் மனதில் மறையாமல் நிற்பார்’’ என்று கூறி னார்.
பி.காம். படிக்கும்போது நடிகர் விவேக்குடன் படித்த அவரது கல்லூரி நண்பர் முகில் கூறிய தாவது: நண்பர் விவேக் மறைவை எங்களால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. 3 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து படித்ததை நினைத்து அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்வேன். அவர் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். கல்லூரியில் 10 பேர் ஒரு இடத் தில் கூடி நின்று பேசினால் இடை யில் ஏதாவது கமென்ட் அடித்து அனைவரையும் சிரிக்க வைப்பார். இப்படித்தான் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தார். அவர் எப்போதுமே துருதுருவென இருப்பார். எங்கள் வகுப்பில் 63 பேர் படித்தோம். படிப்பில் முதல் 10 பேரில் ஒருவராக அவர் இருப்பார். அவருக்கு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். மோனோ ஆக் டிங் செய்வதில் விவேக்கை மிஞ்ச முடியாது.
ஒரு முறை திருச்சியில் அனைத்து கல்லூரிகளுக்கான கலை நிகழ்ச்சி போட்டிகள் நடந்தன. இதில், மோனோ ஆக்டிங்கில் நடிகர் சார்லி முதல் பரிசும், நடிகர் விவேக் இரண்டாவது பரிசும் பெற்றார். அப்போது சார்லிக்கும், விவேக்குக்கும் சினிமாவில் நுழைவோம் என்பது தெரியாது.
திருச்சியில் பரிசு பெற்ற பின், கல்லூரியின் செல்லப்பிள்ளையா கிவிட்டார் விவேக். அவரின் நடிப்புத் திறமையை வளர்த்துக் கொள்ள பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா பெரிதும் உதவினார். கல்லூரி நாடகங்களுக்கு வசனம் எழுத விவேக்கை ஊக்குவித்தார். நாங்கள் படித்தபோதுதான் அமெரி க்கன் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் ஒரு மணி நேரம் விவேக்கின் நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்பட்டது. அவரது நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு இருந்தது. பலரும் பாராட்டினர்.
கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் அவருக்கு கிடைத்த பாராட்டு கள்தான், பின்னாளில் உலகம் அறிந்த ஒரு பெரிய நடிகராக அவரை கொண்டு வந்து நிறுத் தியது. அதை அவரே அடிக்கடி சொல்வார்.
சினிமாவில் உச்சம் தொட்டப் பிறகும் கல்லூரி நண்பர்களுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தார். நண்பர்கள் கஷ்டப்படுவது தெரிந் தால் ஓடோடிச் சென்று உதவக் கூடிய நல்ல இதயம் படைத்தவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago