திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், செங்குத்தாக நிற்கும் பொருட்களின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும்போது, நிழல் பூஜ்ஜியமாகக் கூடிய 'நிழல் இல்லா நாள்' நிகழ்வு நேற்று நிகழ்ந்தது.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி, மணப்பாறை, துவாக்குடி ஆகிய இடங்களில் நிழல் இல்லா தின நிகழ்வை மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் சிட்டுகள் மையத்தில் நிழல் இல்லா தின பரிசோதனை நிகழ்வு நேற்று பகல் 12.15 மணிக்கு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வுக்கு, அறிவியல் இயக்க ஆர்வலர் ஹரிபாஸ்கர் தலைமை வகித்தார். சிட்டுகள் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.அனுசுயா, நிழல் இல்லா தினம் குறித்து விவரித்தார். பொறுப் பாளர்கள் பூவிழி, பாலுச்சாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
திருச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வானியல் ஆர்வலர் பாலா பாரதி பகல் 12.15 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உரிய உபகரணங்களை வைத்து, செயல்விளக்கமளித்தார். இதேபோல, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நிழல் இல்லா தினம் குறித்து நிர்வாகிகள் செயல்விளக்கம் அளித்தனர்.
திருச்சி மாவட்டத்தில் முசிறி, லால்குடி சுற்றுவட்டாரங்களில் இன்று(ஏப்.18) நிழல் இல்லா தின நிகழ்வைக் காணலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில்...
தஞ்சாவூரில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியிலும், புன்னைநல்லூர் மாரியம்மன்கோவி லில் உள்ள பள்ளியிலும் நேற்று பகல் 12.12 மணிக்கு நிழல் இல்லா தின நிகழ்வை ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில்...
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே கீழத்திருப் பாலக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்றுகூடி பகல் 12.11 மணிக்கு ஒரு திடலில் நீண்ட குழாய் வடிவ அமைப்பை மண்ணில் நிற்கவைத்து, நிழல் பூமியில் விழாமல் இருப்பதைக் கண்டறிந்தனர்.இதேபோல, திருத்துறைப் பூண்டி அருகே கட்டிமேடு அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் எம்.எஸ்.பாலு முன்னிலையில் மாணவர்கள் இந்நிகழ்வை கண்டறிந்தனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பள்ளி மாணவர் களும், சிறார்களும் இந்நிகழ்வை கண்டுகளிக்க தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் வழிகாட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago