அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப் படையில் எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் த.ரத்னா தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற் றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்து பேசி யது: அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட நடைமுறைகளை கடை பிடிக்கும்படி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதைக் கடை பிடிக்காதவர்களுக்கு வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பொது சுகா தாரத் துறையின் மூலமாக அப ராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கரோனா பரிசோத னைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்தவும் தொடர் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அதேபோல, கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள் ளப்படுவதுடன், நோய்க் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட் கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மருத்து வப் பணிகள் இணை இயக்குநர் இளவரசன் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago