வேலூர் மாவட்டத்தில் கிராமப் புறங்களிலும் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப் படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று இரண் டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 731- ஆக இருந்தது. இதில், 21 ஆயிரத்து 500 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 358 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 700-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை நேற்று 195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், வேலூர் மாநகர பகுதியில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந் துள்ளது. வேலூரில் தங்கி யுள்ள வெளி மாநிலத்தைச் சேர்ந்த 15 பேருக்கு தொற்று பாதித்திருந்தது. குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று 15 பேரும், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, மேல்பாடி, அரியூர், லத்தேரி பகுதிகளிலும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இதன் மூலம் நகரப்பகுதிகளில் இருந்து கிராமப் பகுதிகளிலும் கரோனா தொற்று வேகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் மூலம் தொடர்ந்து கரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, தினசரி 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இதுவரை வேலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட்டுள் ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட வர்கள் பொது இடங்களில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago