வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி-முருகன் சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள், இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமை தினத்தில் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மத்திய சிறையில் இருந்து முருகனை காவல் துறையினர் நேற்று பெண்கள் தனிச்சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு, காலை 9.50 மணி முதல் 10.20 மணி வரை நளினி-முருகன் சந்திப்பு நடைபெற்றது.
பின்னர் பாதுகாப்புடன் ஆண்கள் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago