வெளிமாநிலம் சென்று வரும் - லாரி ஓட்டுநர்கள் கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தல் :

By செய்திப்பிரிவு

வெளி மாநிலத்திற்கு சென்று வரும் லாரி ஓட்டுநர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டம் சரக்கு போக்குவரத்துத் தொழிலில் முன்னோடி மாவட்டமாக விளங்குவதால், வாகன ஓட்டுநர்கள் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

கரோனா தொற்றுக்கான அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சில இடங்களில் எவ்வித அறிகுறியும் இல்லாமல், கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த லாரி ஓட்டுநர்கள் தாங்களாகவே சென்று கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்தல், வெளியிடங்களுக்கு செல்லும் போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்