திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

திமுக, மார்க்சிஸ்ட் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பாதுகாப்பு குளறுபடிகள் உள்ளதாக திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காமாட்சி, துணை அமைப்பாளர் சூசை ராபர்ட் ஆகியோர் தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர்.

அதில், வாக்கு எண்ணும் மையத்தின் தெற்கு நுழைவு வாயில் அருகே ஆட்கள் வெளியில் சென்றுவரும் வகையில் நீர்வழிப் பாதை உள்ளது. இதைத் தடுப்புகள் கொண்டு அடைக்க வேண்டும். கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக திமுக வேட்பாளர்கள் அர.சக்கரபாணி, ஆண்டி அம்பலம், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், கோரிக்கைகள் ஏற்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தெற்கு மற்றும் கிழக்கு நுழைவு வாயில்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. கூடுல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்