வேலூர் மாவட்டத்தில் மேடை மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக் கோரி இசைக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்டத் தலைவர் நசீர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பாபு, பொருளாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்றவர்கள் திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இன்னிசை கச்சேரி நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கோரி முழக்கமிட்டனர்.
பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘‘கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி கரோனா தொற்று பரவலால் மேடை மெல்லிசை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் மேடை மெல்லிசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்தத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் உள்ள னர்.
இசை கலைஞர்களின் குடும்ப வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago