காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி - டிஎஸ்பி அலுவலகம் முன்பு : 7 மாத கர்ப்பிணி தர்ணா :

By செய்திப்பிரிவு

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி செங்கம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 7 மாத கர்ப்பிணி நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்கரிப்பூர் கிராமத்தில் வசிப்பவர் சுந்தரி. முத்தனூர் கிராமத்தில் வசிப்பவர் சிலம்பரசன். இருவரும் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு, சிலம்பரசன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் தங்களது மகனை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

கணவரை காணவில்லை

இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியான சுந்தரி, கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி செங்கம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர், தனது கணவரை கடந்த 4 மாதங்களாக காணவில்லை. அவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என செங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 7 மாத கர்ப்பிணியான என்னுடன், எனது கணவரை சேர்த்து வைக்க வேண்டும்” என்றார்.

காவல் துறையினர் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த செங்கம் காவல்துறையினர், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று கர்ப்பிணி பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதனையேற்று, அப்பெண் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்