கரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவியர் விழப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக கரோனா தொற்று ஒற்றை இலக்க எண் என்ற அளவில் குறைவாக இருந்தது. கடந்த சில தினங்களாக இரண்டு இலக்கத்தை தாண்டி தினசரி பாதிப்பு 80-க்கும் மேல் உள்ளது.
இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு மற்றும் மருத்துவ நிபுணர்களது நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது போன்ற நடவடிக்கைகளின் காரணமாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே, பிற நாடுகள், பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் கரோனாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வெளிவரும் விவரங்களை மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசின் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி விரைவில் நாமக்கல் மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago