திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 102 இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், 61 தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள், 30 ஆயுதப்படை வீரர்கள் உள்ளிட்டோர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான பாதுகாப்பு அறையும் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த வேட்பாளர்களின் முகவர்களிடம் கரோனா தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிதல் போன்ற அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும், என அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago