பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர், செட்டிக்குளம், பாடாலூர், பெருமாள் பாளையம், நாட்டார்மங்கலம், மங்கூன், இரூர், காரை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயக் கிணறுகள், குளங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், தற்போது கோடை உழவு செய்யும் பணிகளையும் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
தற்போது பெய்துவரும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது பெய்து வரும் மழை நீர் ஏரி, குளங்களுக்கு செல்லும் வகையில் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் கழிவு நீர் கால்வாய்களிலும், சாலையோரங்களிலும் வழிந்து ஓடி மழை நீர் வீணாகிறது.
இதனால், மழை நீர் சேமிப்பு திட்டங்களை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago