வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இலவச கரோனா தடுப்பூசி திருவிழா மூலமாக தினசரி 6 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதற்காக, வேலூர் மாவட்டத்தில் 40 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 20 இடங்களில் நேற்று கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி திருவிழாவின் மூலம் தினசரி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், நகர்ப் புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவ மனைகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கட்டாயம் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை யினர் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு முகாம்கள்
வேலூர் மாவட்ட தொழில் மையம், நேப்கோ பிரிண்ட், வேலூர் மாவட்ட அச்சக உரிமை யாளர்கள் சங்கம் சார்பில் இலவச கரோனா தடுப்பூசி முகாம் நேற்றுநடைபெற்றது. வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள நேப்கோ பிரிண்ட் வளாகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இதில், 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதேபோல், வேலூர் சாஸ்திரி நகரில் மாவட்ட சுகாதார துறை, அனைத்து வணிகர்கள் சங்கத்தினர் மற்றும் சாஸ்திரி நகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இலவச கரோனா தடுப்பூசி முகாமுக்கு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ப.ஞானவேலு தலைமை தாங்கினார். முகாமை வணிகர் சங்க துணைத் தலைவர்கள் ரமேஷ்குமார், பாலு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், மாநகராட்சி ஆணையர் சங்கரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago