மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் ரேஷன் கடையும் ஒன்று. நுகர்வோரின் ரேஷன் கார்டுகளை ஸ்கேன் செய்த உடன், அவர்கள் கைரேகையை அங்குள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். அனைவரும் ஒரே மெஷினில் கைரேகையை பதிவு செய்கிறார்கள்.
கரோனா இரண்டாம் அலை பரவும் சூழலில், ரேஷன் கடைகளுக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்து வருகின்றனர். முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றில் கவனம் செலுத்தும் அரசு, இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளவில்லை.
இந்த கைரேகை இயந்திரங்கள் மூலம் நோய் பரவ வாய்ப்புண்டு. இதைத் தடுக்க குறைந்தபட்சம் ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு கிருமிநாசினி அளிக்க வேண்டும். எனவே இதில் முன்தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago