எலவனாசூர்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடர்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பிடாகம் எனும் எலவனாசூர்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
வெயில் வாட்டி வதக்கும் சூழலில் தற்போது ஒரு நாளைக்கு 10 அல்லது 15 முறை மின் வெட்டு தொடர்வதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த மின்வெட்டால் உச்சி வெயில் நேரத்தில் வீட்டில் இருக்க முடியாத சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் எலவனாசூர் கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அறிவிக்கப்படாத மின்தடை குறித்து எலவனா சூர்கோட்டை மின்வாரிய செயற் பொறியாளர் கார்த்திக்கேயனிடம் கேட்டபோது, “அதிக மின் பயன்பாடு காரணமாக மின்ன ழுத்தம் நிலவியது.
தற்போது சரிசெய்யப்பட்டு விட்டது. இனி அறிவிக்கப்படாத மின்தடை இருக்காது” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago