திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கண்ணாரப்பேட்டை அம்மா மினி கிளினிக்கில் ஆயுஷ்மான் பாரத் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மருத்துவர் ச.வருண் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வே.புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய பயிற்சியாளர் சா.சம்பத் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். இதில் பங்கேற்றவர்களுக்கு மினி கிளினிக் சேவை குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago