தென்காசியில் 3-வது அடர்வனம் : 500 மரக்கன்றுகள் நடப்பட்டன

By செய்திப்பிரிவு

தென்காசி ஆசாத் நகரில் சிற்றாற்று பாலங்களுக்கு இடையே உள்ள காலியிடத்தில் பொதுப் பணித்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று கடந்த 2018-ம் ஆண்டு மரக்கன்றுகள் நடப் பட்டன. ப்ராணா மரம் வளர் அமைப்பு சார்பில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் ஒத்துழைப்புடன் இங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாவாகி என்பவர் அறிமுகப்படுத்திய அடர் முறையில் நடப்பட்ட மரக்கன்றுகள் குறுகிய காலத்தில் வளர்ந்து சிறு வனம்போல் காட்சியளிக்கிறது.

இதைத் தொடர்ந்து, தென்காசியில் இருந்து ஆயிரப்பேரி செல்லும் சாலையில் சிற்றாற்று கரையையொட்டிய பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் கடந்த ஆண்டு இரண்டாவது மியாவாகி அடர்வனத்தை உருவாக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. இங்கு மரக்கன்றுகள் நடும் பணியை அப்போதைய ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கிவைத்தார். இங்கு நடப்பட்ட மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.

இந்நிலையில், தென்காசி அறிஞர் அண்ணா நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மூன்றாவது மியாவாகி அடர்வனத்தை உருவாக்க மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. இதில் பறவைகளுக்கு பயனளிக்கும் வகையில் பழமரக்கன்றுகள் உட்பட 40 வகையைச் சேர்ந்த 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜான், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் விஜய லெட்சுமி, ப்ராணா மரம் வளர் அமைப்பின் தன்னார்வலர்கள், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

மியாவாகி என்பவர் அறிமுகப்படுத்திய அடர் முறையில் நடப்பட்ட மரக்கன்றுகள் குறுகிய காலத்தில் வளர்ந்து சிறு வனம்போல் காட்சியளிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்