திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிற இடங்களிலும் பரவலாக கோடை மழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
மணிமுத்தாறு- 7, அம்பா சமுத்திரம்- 1, ராதாபுரம்- 1.4, பாளையங்கோட்டை- 2, திருநெல்வேலி- 1.4.
143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 105.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 154.98 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 104.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 93.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 150 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):
சேர்வலாறு- 118.34 அடி (156), வடக்குபச்சையாறு- 43.47 அடி (50), நம்பியாறு- 12.79 அடி (22.96), கொடுமுடியாறு- 6.45 அடி (52.50).
பாபநாசம் அணை நீர்மட்டம் 105.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 154.98 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago